தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது காவிரி நதி தான், அந்த காவிரி ஆற்றில் நீர் வரவில்லை என்றால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் முடங்கிப் போகும் ஒரு நிலை இருக்கிறது. அப்படி காவிரியாற்றில் நீர் திறந்து விட வில்லை என்றால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி விடுவார்கள், அப்போதெல்லாம் விவசாயத்திற்கு கைகொடுத்தது சேலம் மாவட்டம் மேட்டூர் கிராமத்தில் இருக்கக்கூடிய மேட்டூர் அணை தான்.
இந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணைக்கு அதிகபட்சமாக சென்ற 27ம் தேதி ஒரு வினாடிக்கு 37ஆயிரத்து 162 கன அடி வீதம் தண்ணீர் வந்தது அது கூட ஒரு சில தினங்களிலேயே குறைந்து போனது நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 16,795 கன அடியாக இருந்தது.
இது நேற்றைய தினம் 13 ஆயிரத்து 172 கன அடியாக குறைந்து போனது அணையில் இருந்து ஒரு வினாடிக்கு சுமார் 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது நேற்றுமுன்தினம் 109 பணி 70 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை நிலவரத்தின் அடிப்படையில் 142 அடியாக அதிகரித்தது. அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து கொண்டே செல்வதால் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.