தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும், இது அடுத்த 3 நாட்களுக்கு மெதுவாக மேற்கு நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் வரும் மூன்றாம் தேதி வரையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், ஒரு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்
.
அந்த விதத்தில் இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக்கன மழை வரையும் புதுக்கோட்டை, மதுரை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் கன மழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த சூழலில் இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருந்த சூழ்நிலையில், கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக, இன்று விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது இதனை கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் கடலூரை தொடர்ந்து விழுப்புரத்தில் கனமழை பெய்து வருகின்றது இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் கனமழை எதிரொலியாக கள்ளக்குறிச்சி, திருவாரூர், கடலூர், திருநெல்வேலி, விழுப்புரம், உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.