பருவ மழையின் தீவிரம்! தமிழகத்தில் வேகமாக உயர்ந்து வரும் நீர்நிலைகளின் கொள்ளளவு!

0
122

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக, தமிழ்நாட்டில் இருக்கின்ற 90 நீர்நிலைகளில் எண்பத்தி 1.65 சதவீதம் தண்ணீர் சேமிக்கப்பட்டு தொடர்ந்து நீர்நிலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட பூண்டி ஏரியில் 87.19 சதவீதம் சோழவரம் 77.98 சதவீதமும், அதேபோல புழல் பகுதியில் 82.79%சதவீதம், தேர்வாய்க்கண்டிகை 94 சதவீதம் செம்பரம்பாக்கம் 77. 15% நிரம்பி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல விருதுநகர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய சாஸ்தா கோவில், தேனி மாவட்டத்தில் இருக்கக்கூடிய சோத்துப்பாறை, திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆண்டியப்பனூர் ஓடை, வேலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மோர்தனா, தென்காசி மாவட்டத்தில் இருக்கக்கூடிய குண்டாறு, ஈரோடு மாவட்டம் பகுதியில் இருக்கக்கூடிய வரட்டுப்பள்ளம், உள்ளிட்ட இடங்களில் 100 சதவீத நீர் தேங்கி இருக்கின்றன.

தமிழக பொதுப்பணித்துறையின் கீழ் இருக்கக்கூடிய நீர்வள ஆதார துறை சென்னை மதுரை கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றது இவற்றின் கட்டுப்பாட்டில் 90 நீர்த்தேக்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த 90 நீர்த்தேக்கங்களில் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 கன அடி நீர் ஆகும்.

இந்தநிலையில், தற்சமயம் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 130 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கின்றது. அதாவது 81.65 சதவீதம் நீர் சேமிக்கப்பட்டு இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தால் நீர்த்தேக்கங்களில் கொள்ளளவு மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே எல்லா நீர் நிலைகளுக்கும் வருகைதரும் நீரின் அளவு மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தவிர்த்து 38 மாவட்டங்களிலும் 14 ஆயிரத்து 138 நீர் பாசன ஏரிகள் இருக்கின்றன இவற்றில் 77  ஏரிகள்100% நிரம்பியிருக்கின்றன 2348 ஏரிகள் 76 முதல் 99 சதவீதமும் 1924 ஏரிகள் 51 முதல் 75 சதவீதமும் 2835 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும் 4 ஆயிரத்து 274 ஏரிகள் 10% முதல் 25% நீர் தேங்கி இருக்கின்றன.

730 ஏரிகள் எதிர்பார்த்த அளவு நீர் சேமிக்கப்படுவதில்லை என பொதுப்பணித்துறையில் நீர்வள துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Previous articleதொடர்ந்து பெய்து வரும் கனமழை! பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை!
Next articleநடப்பு டி20 கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்!