நாளை கண்டிப்பாக ஹைட்ரஜன் குண்டு வீசுவேன்! எச்சரிக்கை செய்த மராட்டிய மந்திரி!

0
168
Definitely a nitrogen bomb tomorrow! Maratha minister warned!
Definitely a nitrogen bomb tomorrow! Maratha minister warned!

நாளை கண்டிப்பாக ஹைட்ரஜன் குண்டு வீசுவேன்! எச்சரிக்கை செய்த மராட்டிய மந்திரி!

கடந்த மாதம் மும்பை சென்ற ஒரு சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்றதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் பிரபல நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மறைமுகமாக அவரை கண்காணித்து இந்த திடீர் கைது நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட ஆரியன்கானை தொடர்ந்து பல முறை ஜாமீன் பெற முயற்சித்தும் 26 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆர்யன் கானை கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை பிரிவு தலைவராக சமீர் வான்கடே செயல்பட்டு வருகிறார்.

அதன் காரணமாக அவர்மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான நவாப் மாலிக் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். அவர் பிறப்பால் ஒரு முஸ்லிம் என்றும், தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தி வருகிறார்.

அவரது மனைவியும் இதுகுறித்து புகார் அளித்ததும் குறிப்பிடத் தக்கது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. வீட்டிற்கு பல மிரட்டல்கள் எல்லாம் வருகிறது என்று கூட ஒரு பேட்டியில் வேதனை தெரிவித்திருந்தார்.  மேலும் இந்த விவகாரம் மராட்டிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை பல்வேறு கட்சிகளும் தன் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் போதைப்பொருள் விவகாரம் குறித்து மராட்டிய முன்னாள் முதல் மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நவாப் மாலிக் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான மோதல்கள், வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ஒருவரை ஒருவர் போட்டுத் தாக்கிக் கொள்கிறார்கள். அந்த அளவிற்கு சண்டைகள் நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து நிழல் உலகில் தீவிரவாதிகளுடன் அவருக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை வெளிப்படுத்துவேன் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறியதோடு நவாப் மாலிக்கிற்கு மும்பை வெடிகுண்டு குற்றவாளிகளுடன் தொடர்பு உள்ளது என்றும் பகீர் என கிளப்பியுள்ளார்.

1993 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு நபருக்கு நவாப் மாலிக்குடன் சேர்ந்து சொத்து பேரம் குறித்து நடத்தி உள்ளார் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மந்திரி நவாப் மாலிக் தேவேந்திர பட்னாவிசை கடுமையாக எச்சரித்துள்ளார்.

அதோடு நாளை நைட்ரஜன் வெடிகுண்டு வீசுவேன் என்றும் தெரிவித்துள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் தொடர்பாக நாளை ஹைட்ரஜன் குண்டை வீசுவேன், தொடர்புகளை அம்பலப்படுத்துவேன் என்று கூறியதோடு நிழல் உலகத்துடன் என்னை இணைத்து எனது புகழை கெடுக்க முயற்சிக்கிறார் என்றும், குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு சட்டப்படி நான் அவருக்கு பதிலடி கொடுப்பேன். தக்க நோட்டீஸ் அனுப்பி பதிலடி கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

Previous articleநிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும்?.நேருக்கு நேர் கேள்வி கேட்ட பெண்!
Next articleகாடுகளின் கலைகளஞ்சியத்திற்கு பத்ம ஸ்ரீ! 77 வயதில் இவர் செய்த அறிய சாதனை!