வடகிழக்கு பருவமழை இந்த வருடம் இயல்பை விட சற்று அதிகமாக செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தொடக்கத்திலேயே தெரிவித்திருந்தது. அதன்படி பருவமழை ஆரம்பத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு இயல்பான அளவைவிட அதிகமாக பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது.
அதிலும் வங்கக்கடல் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்ற சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. குறிப்பாக ஒரு சில மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றைய தினம் இரவு முதல் இடைவிடாமல் விடிய, விடிய காற்றுடன் கன மழை பெய்து வருகின்றது இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக, சென்னை புறநகர் முழுவதும் பல்வேறு சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன, இதனை அடுத்து தொடர் மழை காரணமாக, சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது கனமழை எச்சரிக்கை காரணமாக, அதிகாலை முதல் சென்னையில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை மாநகரில் அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 17.5 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. நுங்கம்பாக்கத்தில் 14 சென்டி மீட்டர் மழையும் எம்ஆர்சி நகரில் 13.6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது, அதேபோல நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை பதிவான மழை நிலவரம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.