செவ்வாய் கிரகத்தில் வரும் காலங்களில் மனிதர்கள் வாழலாம்! ஆதாரமாக வெளியிட்ட புகைப்படங்கள்!
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழவும், உயிரினங்கள் வாழவும் ஏற்ற சூழல் உள்ளதா? என்ற ஆய்வு பல ஆண்டுகளாகவே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மேற்கொண்டு வருகிறது. அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பெர்சவரன்ஸ் என்ற ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பி வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி அனுப்பப்பட்ட இந்த விண்கலம் கடந்த பிப்ரவரி 18 ம் தேதி செவ்வாய் கிரகத்தில் ஜெசேரோ பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது. இதற்கு முன் நாசா அனுப்பிய ஆர்பிட்டர்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், இந்த குறிப்பிட்ட பள்ளத்தாக்கு பகுதியில் நீர் நிலைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதினர்.
எனவே அதன் காரணமாக ஜெசேரோ பள்ளத்தாக்கு பகுதியை ஆய்வுக்காக நாசா தேர்ந்தெடுத்துள்ளது. ஏற்கனவே அதன் மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது நாம் அறிந்ததே. அந்த வகையில் தற்போது முன்பு எப்போதும் இதுவரை கண்டிராத, புதிய படங்களையும் பெர்சவரன்ஸ் ரோவர் புதிதாக அனுப்பியுள்ளது.
அதாவது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பாறைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தினை முதன்முறையாக படம் பிடித்து அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த படத்தினை நாசா தற்போது மக்களுக்காக வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 1970 ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக நாசா பல விண்கலங்களை அனுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அந்த ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக இது உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது சிறந்த முன்னேற்றம் என்றும் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததா? இல்லையா? என்பதையும், இந்த கிரகம் ஒரு நாள் மனிதர்கள் வாழ கூடியதாக மாறும் என்பதையும் ஆய்வின் முடிவில் இருந்து தான் தெரிந்து கொள்ள முடியும்.
https://pbs.twimg.com/media/FDxGtq2VcAANsMR?format=jpg&name=360×360
https://twitter.com/NASAPersevere?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1458118178802847747%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FWorld%2F2021%2F11%2F11132221%2FNASAs-Perseverance-Mars-Rover-Spots-Something-No-Ones.vpf
https://t.co/Ex1QDo3eC2?amp=1