இன்று கன மழை பெய்ய இருக்கும் அந்த 10 மாவட்டங்கள்!

0
143

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழ்நாட்டில் இன்றைய தினம் ஈரோடு, நீலகிரி, கோவை, உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது. இதை தவிர மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி தென் கிழக்கு அரபி கடலில் இருந்து வட கேரளா, கர்நாடகா மற்றும் வடதமிழகம், மூலமாக தென்மேற்கு வங்கக் கடல் வரையில் 4.5 கிலோ மீட்டர் உயரம் வரையில் நிலவிவருகிறது.

இதனால் தமிழகம், புதுவை, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் அனேக பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை வரையில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீச வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Previous articleஅதிமுக கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா? கமலாலயத்தில் நடந்த சீரியஸ் விவாதம்!
Next articleஅறிவுடையோருக்கு ஆண்டியும் அரசனும் ஒன்றுதான்!