எனது வாழ்க்கை படத்தில் இவர்தான் நடிக்க வேண்டும்! நேர்காணலில் மனம் திறந்த விஸ்வநாதன் ஆனந்த்!
சர்வதேச தரத்திலான சதுரங்க விளையாட்டு தொடர் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் கொல்கத்தா சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தனது கருத்துக்களையும், தனது வாழ்க்கையைப் பற்றியும் கூறியுள்ளார். நான் என்னுடைய வாழ்க்கை குறித்து திரைப்படமாக எடுக்க அனுமதி அளித்துள்ளேன்.
என் வாழ்க்கை கதையை முழுவதுமாக தயாரிப்பாளரிடம் கூறிவிட்டேன். திரைக்கதை எழுதும் பணிகள் விரைவில் தொடங்கி நடைபெறவுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக அந்த வேலைகள் தற்போது வரை தடைபட்டுள்ளன. சில படங்களின் படப்பிடிப்பு என்பது எப்போது தொடங்கும் என்று யாராலும் முன் கூட்டியே கூறமுடியாது. இதுவும் அது மாதிரியான ஒன்றுதான். இந்த திரைப்படம் குறித்து மேலும் வேறு தகவல்கள் எதையும் கூட என்னால் தற்போது தெரிவிக்க இயலாது என்றும், இன்னும் சில தினங்களில் அனைத்தையும் விவரமாக தெரிவிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய வாழ்க்கை திரைப்படமாக வரும்போது சதுரங்க விளையாட்டு வீரர்கள் வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்ற கூற்று பொய் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். எனினும் தனு வெட்ஸ் மனு திரைப்படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இவருடைய வாழ்க்கை வரலாற்று திரைபடத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. எந்த நடிகர் உங்கள் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு, அவர் மிகுந்த ஆர்வமாக அமீர் கான் என்னுடைய கதையில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று ஆசைப்படுவதாக கூறி இருந்தார்.
பெரும்பாலும் அவருக்கும் எனக்கும் நிறைய விஷயங்களில் பல ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் யார் நடிப்பார்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல இயலவில்லை. மேலும் அரசியல் குறித்த கேள்வியை நிறைவு செய்யும் முன்பே, அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. நான் இப்போது போலவே சதுரங்க விளையாட்டை தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் கூறி முடித்து வைத்தார். மேலும் அவரிடம் அவருடைய ஓய்வு குறித்து கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு கூறினார்.
இப்போதைக்கு எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லை. இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று வந்தேன். இன்னும் நிறைய போட்டிகள் வெளி வர உள்ளன.இந்த மாதம் 24 ம் தேதி தொடங்க இருக்கும் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் தொடர்களில் நானும் ஒரு வர்ணனையாளராக உள்ளேன் என்றும் கூறி இந்த நேர்காணலை நிறைவு செய்தார்.