சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

Photo of author

By Sakthi

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சென்னை, புதுச்சேரி க்கும் இடையில் கரையை கடக்க ஆரம்பித்தது, தாழ்வு மண்டலத்தின் முக்கிய பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரையில் கரையை கடந்தது எனவும், முழு பகுதியும், அதிகாலை 5.30 மணி அளவில் கடையை கடந்து விட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

கரையை கடந்தது, தாழ்வு மண்டலம் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திர மற்றும் தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருக்கின்றது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 21-ஆம் தேதி வரையில் ஒரு சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் கனமழையின் காரணமாக, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட இருக்கிறது. அதோடு ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.