அரசு தேர்வுகள் துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!

0
144

நடப்பு கல்வி வருடத்திற்கான பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் புதிதாக பயிற்றுமொழி சேர்க்கப்படுகின்றது என்று அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேது ராம வர்மா தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராமவர்மா அவர்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது நடப்பு கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக பயிற்றுமொழி சேர்க்கப்படுகின்றது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் என்ற விபரம் வகுப்பு வாரியாக இணைக்கப்பட இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

மாணவர்களுடைய பயிற்றுமொழி விவரங்களை தனித்தனியாக இணையதளத்தில் பதிவு செய்வதற்கு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், புதிய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராமன் தெரிவித்து இருக்கிறார்.

Previous articleபடுகொலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி! குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த தனிப்படை காவல்துறையினர்!
Next articleஎஸ்எஸ்ஐ கொலை வழக்கில் பிடிபட்ட சிறுவர்கள்! ரகசிய விசாரணையில் தெரியவந்த தகவல்கள்!