மூன்றேல்லாம் கிடையாது ஒன்றுதான்! பின்வாங்கும் அரசு!

0
194
All three are one and the same! Government retreating!
All three are one and the same! Government retreating!

மூன்றேல்லாம் கிடையாது ஒன்றுதான்! பின்வாங்கும் அரசு!

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்தது. அதன் பிறகு அவர் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்வதாக பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதிலும் அவர் பொறுப்பேற்றவுடன் அங்கு நடந்த போலீஸ் என்கவுண்டர் யாராலும் மறக்க முடியாததுதான்.

ஏனெனில் ஒரு பாலியல் வழக்கில் திஷா என்று சொல்லப்படும் அந்த வழக்கில், குற்றவாளிகள் அனைவரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது போல ஒரு அதிரடி தமிழகத்தில் நடந்தால் கூட பரவாயில்லை என்று பலர் தெரிவித்தனர்.

அதன் பிறகு அவர் பல்வேறு அதிரடி திட்டங்களை கொண்டு வந்தார். ஆந்திராவின் அனைத்து பகுதிகளிலும் சமமான வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக மூன்று தலைநகரங்களை உருவாக்கும் படி  அவரது ஆலோசனையின் பேரில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அப்பகுதியில் உள்ள அமராவதியில் சட்டமன்றம் செயல்படும் என்றும், கர்னூலில் உயர்நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும், தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகையை விசாகப்பட்டினத்தில் மாற்றவும் திட்டமிடப்பட்டது.

சீரான வளர்ச்சி பெறும் நோக்கில் இந்த மூன்று தலைநகரங்களின் திட்டம் செயல்படுத்த அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஜெகன்மோகன்ரெட்டியின்  அரசு கூறினாலும், இதற்கு எதிர்க் கட்சிகளும், விவசாயிகள் தரப்பிலும் இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆந்திர அரசின் முடிவுக்கு எதிராக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அந்த மனுக்களின் மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் ஆந்திர அரசு உயர் நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் சர்ச்சைக்கு உள்ளான அனைத்து பகுதிகளின் பரவலாக்கம் மற்றும் உள்ளடக்கிய மேம்பாட்டு மசோதா 2020 திரும்பப் பெறுவதாக ஆந்திர அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் புகுந்த உயர்ரக வாகனம்! குழந்தைகள் உட்பட பலர் படுகாயம்!
Next articleமக்கள் நீதி மய்யம் தலைவருக்கு ஏற்பட்ட தொற்று! மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்!