நான் நன்றாக பாதுகாப்பாக இருக்கிறேன்! கேள்விகளுக்கு பதிலாக வீடியோவை வெளியிட்ட சீன அரசு!
சீனாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய். 35 வயதான இந்த பெண் அந்நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவருமான ஜான் கோலி மீது பாலியல் குற்றச்சாட்டை கூறி இருந்தார். மேலும் அவர் சமூக வலைத்தளத்தில் இந்த குற்றச்சாட்டை வெளியிட்டதன் காரணமாக அந்த நாள் முதலே மாயமாகிவிட்டார்.
மேலும் சீனா அரசு அந்த குற்றச்சாட்டை நீக்கியும் விட்டது. அவர் எங்கு இருக்கிறார். என்ன செய்கிறார் என்ற தகவல் கூட யாருக்கும் தெரியவில்லை. யாரைக் கேட்டாலும் தெரியவில்லை என்று மட்டுமே தெரிவித்தார்கள். மேலும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஜான் கோலி அதிபர் ஜின்பிங்க்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் சொன்னார்கள்.
எனவே பெங் சுவாய் மாயமானதற்கு பின்னணியில் சீன அரசும் ஏதோ சதி செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. இதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் முழு கவனம் ஈர்த்தது. மேலும் இந்த நிலையில் மாயமான டென்னிஸ் வீராங்கனை நலமாக இருப்பதை உறுதிசெய்யும் ஆதாரத்தை வழங்க வேண்டும் என அமெரிக்காவும் வலியுறுத்தியது.
மேலும் அவர் தான் உலகின் முதல் டென்னிஸ் பெண் வீராங்கனை என்றும் ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் கூட அவர் எங்கே என்று கேள்வி எழுப்பியதும் குறிபிடத்தக்கது. இந்த உலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், சீனாவின் டென்னிஸ் வீராங்கனை பெங் சுவாய் உடன் இன்று வீடியோ காலில் பேசியுள்ளார்.
மேலும் அவர் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக அவரே கூறினார் என்றும் தெரிவித்தார். சீன விளையாட்டு அதிகாரி லீ லிங்வே மற்றும் தடகள ஆணையத்தின் தலைவரான எம்மா டெர்ஹோ ஆகியோரும் இந்த உரையாடலில் கலந்து கொண்டனர். மேலும் இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 30 நிமிட வீடியோ உரையாடலில் தனது நலம் குறித்த அக்கரைக்கு அந்த வீராங்கனை அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் என்றும், மேலும் அவர் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாகவும் தனது பீஜிங்கில் உள்ள தனது சொந்த வீட்டில் வசிக்கிறார் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அவரது தனி உரிமைக்கு மதிப்பளிக்க விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார். தடகள ஆணையத்தின் தலைவரான எம்மா டெர்ஹோ கூறும்போது, அவர் நன்றாக இருப்பதை கண்டு நான் நிம்மதி அடைந்தேன். இது எங்கள் முக்கிய கவலையாக இருந்தது என்றும், அவர் தற்போது நிம்மதியாக இருக்கிறார்.
நான் அவருக்கு எங்கள் ஆதரவுகளை தெரிவித்தேன் என்றும் கூறினார். மேலும் அவருடைய வசதிக்காக எந்த நேரத்திலும் எங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் கூறினேன். அவர் வெளிப்படையாகவே எங்களை பாராட்டினார் என்றும் கூறியுள்ளார்.
https://twitter.com/shen_shiwei/status/1461715435385020419/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1461715435385020419%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FWorld%2F2021%2F11%2F22155441%2FPeng-Shuai-Informs-Olympic-Officials-She-Is-safe-In.vpf