சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சட்டவிரோத நகை கடத்தல் கும்பல்!

0
163

சென்னை மீனம்பாக்கம் நாட்டு விமான நிலையத்திற்கு குவைத்திலிருந்து விமானம் வந்தது அந்த விமானத்தில் வருகை தந்த பயணிகளை விமான நிலைய சுங்க வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த சமயத்தில் வெளியே செல்வதற்காக வந்த பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சுங்க வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தார்கள் அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவருடைய உடைமைகளை சோதனை செய்தார்கள், அந்த சோதனையில் அவரிடம் இருந்த சமையல் பாத்திரத்தின் கைப்பிடிக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்து இருக்கிறார்கள். அவரிடமிருந்து 540 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தார்கள்.

அதேபோன்று குவைத் நாட்டில் இருந்து கொழும்பு வழியாக சென்னை வந்தார் இன்னொரு விமானத்தில் பயணம் செய்தவர்கள் மறைத்து வைத்து கடத்தி வந்த 556 கிராம் தங்கத்தையும் கைப்பற்றி இருக்கிறார்கள். அதோடு துபாயில் இருந்து சென்னை வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து சமயத்தில் அதில் 125 கிராம் எடை கொண்ட 54 விலை உயர்ந்த ஐபோன்கள் 4 ஆயிரத்து 800 சிகரெட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்து இருக்கிறார்கள். அவற்றையும் சுங்க வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக சொல்லப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் மூன்று பேரிடம் இருந்து 54 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 227 கிராம் தங்கத்தையும், 3 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன், சிகரெட்டுகள், உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பிடிபட்ட 3 பேரிடமும் விசாரணை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

Previous articleஇந்தியாவில் வெகுவாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு!
Next articleமெரினாவில் போராட்டமா? பீதியில் காவல்துறையினர்!