அந்த விவகாரத்தை வேண்டுமென்றே பெரிது படுத்தினார்கள்! வீராங்கனை விஷயத்தில் காட்டம் தெரிவித்த சீனா!

Photo of author

By Hasini

அந்த விவகாரத்தை வேண்டுமென்றே பெரிது படுத்தினார்கள்! வீராங்கனை விஷயத்தில் காட்டம் தெரிவித்த சீனா!

சீனாவில் பிரபல டென்னிஸ் வீராங்கனை காணவில்லை என்று பலரும் கவலை தெரிவித்த நிலையில் நேற்று நான் பத்திரமாக இருக்கிறேன் என்று அந்த வீராங்கனை வீடியோ காலிங் மூலம் சில முக்கிய நபர்களிடம் பேசியுள்ளார். பெங் சூவாய் பிரபல டென்னிஸ் வீராங்கனை. 35 வயதான  இவர் இரட்டையர் பிரிவில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

மேலும் இவர் உலகின் முதல் டென்னிஸ் வீராங்கனை எனவும் கூறப்படுகிறது. அவர் சில தினங்களுக்கு முன்பு அந்த நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவருமான ஜான் கோலி மீது பாலியல் புகார் ஒன்றை சமூக வலைதளத்தின் மூலம் பதிவு செய்தார். அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்றே யாருக்கும் தெரியவில்லை.

சீன அரசால் இணையத்தில் அந்த புகாரும் அழிக்கப்பட்டது. எனவே அவரைக் குறித்து பலரும் கவலை தெரிவித்து வந்தனர். இது குறித்து சீன அரசுக்கும் பங்கு இருக்கலாம் என்ற நோக்கிலும் பல கருத்துக்களை பலரும் கூறி வந்தனர். இது குறித்து பலரும் சந்தேகம் தெரிவித்ததன் காரணமாக இந்த விவகாரம் அனைவரிடத்திலும் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

இதனை தொடர்ந்து பெங் சூவாய் எங்கே இருக்கிறார் என்பது குறித்த உண்மையான ஆதாரங்களை தருமாறு சீனாவை ஐ.நாவும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளும் வலியுறுத்தி வந்தன. இது சீன அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெங் சூவாய் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ ஒன்றை நேற்று சீன அரசு இணையத்தின் மூலம் வெளியிட்டது.

மேலும் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற ஒரு டென்னிஸ் போட்டியின் தொடக்க விழாவில், அந்த வீராங்கனை கலந்து கொண்டதாகவும் கூறி, அதையும் இணையதளத்தில் வெளியிட்டது. மேலும் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் ஒருவருடனும் 30 நிமிட வீடியோ கால் மூலம் அந்த வீராங்கனை பேசினார். அப்போது தங்களுக்கு நன்றி என்றும், நான் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்று மனித ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அரசாங்கம் சீன அரசு டென்னிஸ் வீராங்கனை விஷயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் வெஸ் லே டிரியண் தெரிவித்த போது, நான் அவரிடம் இருந்து ஒன்றை மட்டும் தான் எதிர்பார்க்கிறேன்.

விளையாட்டு வீராங்கனை என்ன நடக்கிறது என்பதை பொதுவெளியில் திறந்த மனதுடன் பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத்துறை தெரிவிக்கும் போது, உலகம் முழுவதும் பேச்சு சுதந்திரம், பாலின சமத்துவம் மற்றும் பாலியல் மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தை மேம்படுத்துவதில் பிரான்ஸ் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக டென்னிஸ் அமைப்பின் தலைவர் ஸ்டீவ் சைமன் கடந்த வாரம் டைம்ஸ் நாளிதழுக்கு ஒரு பேட்டி அளித்து இருந்தார். அப்போது அவர் அந்த வீராங்கனையுடன் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்தோம். ஆனால் எங்களால் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. மேலும் எதுவும் செய்யவும் முடியவில்லை என்றும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே கடந்த வாரத்தில் பெங் சூவாய் எங்கே என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் மிகவும் வைரலாகி வந்ததும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தனை எதிர்ப்புகள் மற்றும் கேள்விகளுக்கு மத்தியிலும் சீன அரசின் சார்பில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஜாவோ லிஜியன் இந்த விஷயத்தில் சீனாவின் நிலைப்பாட்டை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் சிலர் இந்த விஷயத்தை வேண்டுமென்றே பெரிதுபடுத்தி, அரசியலாக்குகின்றனர். அதை தொடர்ந்து சிலர் இதை பெரிதுபடுத்தி களங்கத்தையும் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சீனாவின் இந்த நிலைப்பாடு இந்த விவகாரம் முற்றுப்பெறுமா? அல்லது தொடர்கதையாக தொடருமா? என்பது அனைவருக்கும் கேள்விக்குறியாகவே உள்ளது.

https://twitter.com/Athlete365/status/1462464228741328896/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1462464228741328896%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FWorld%2F2021%2F11%2F23151749%2FChina-Says-Tennis-Star-Peng-Shuais-Case-Maliciously.vpf