கனமழை எதிரொலி! எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

Photo of author

By Sakthi

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது இருக்கின்ற சூழ்நிலையில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இதற்கு நடுவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது, இந்த சூழ்நிலையில், கனமழையின் காரணமாக, பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

அதன்படி பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல மதுரை, திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, உள்ளிட்ட, மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.