இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி! அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த இந்திய வீரர்!

Photo of author

By Sakthi

நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 345 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா வந்திருக்கின்ற நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நேற்றைய தினம் ஆரம்பமானது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரகானே பேட்டிங்கை தேர்வு செய்தார், முதல்நாளில் சுப்மன்க்கில், ஜடேஜா ஆகியோர் உள்ளிட்டோர் அரைசதம் கண்ட முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 258 ரன்களை சேர்த்தது.

இரண்டாம் நாளான இன்றைய தினம் போட்டி ஆரம்பித்த சிறிது நேரத்தில் ஜடேஜா 50 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விருத்திமான் சஹா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார், அதன் பிறகு வந்த அஸ்வின் நிலைத்து நின்று விளையாட, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து விளாசினார். 105 ரன்களில் அவர் வெளியேற்றப்பட்டார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுதி, 5 ஜேமிஷன் 3 மற்றும் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள்.