இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்! அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து!

0
204

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பிவி சிந்து தென்கொரியாவின் சிம் யூஜினிடம் மோதினார். இந்த ஆட்டத்தில் சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்.

அதேபோல ஆண்கள் இரட்டையர் போட்டி ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், ராங்கி ரெட்டி, மற்றும் சீராக் செட்டி இணை மலேசிய நாட்டின் கோஜோ பேய் மற்றும் நூர் இஜுதின் இணையை எதிர்கொண்டது. இதில் போராடி வெற்றி பெற்ற இந்திய இணை அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

Previous articleஉலக அளவில் 52 லட்சத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!
Next articleசென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!