தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக இருக்கிறது இது நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வளர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி. விருதுநகர், ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடித்து வருவதால் அனேக மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வரையில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே கனமழை காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.
அதன்படி கனமழையின் காரணமாக, செங்கல்பட்டு திருநெல்வேலி, காஞ்சிபுரம் வட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது. அதோடு மதுரை, தூத்துக்குடி, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.