நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் தீ! விசாரணையில் காவல் துறையினர்!

0
228
Sudden fire in Parliament! Police in the investigation!
Sudden fire in Parliament! Police in the investigation!

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் தீ! விசாரணையில் காவல் துறையினர்!

புது டெல்லியில் நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்துள்ளது. இது நேற்று முன் தினம் தான் ஆரம்பித்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டு விட்டது. அங்கு உள்ள 59 வது அறையில் தான் இன்று காலை 8 மணியளவில் தீ எதிர்பாராமல்  பற்றிக்கொண்டது.

இது எப்படி நிகழ்ந்தது என்று யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இது குறித்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதன் காரணமாக துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் அந்த அறையில் பற்றி எரிந்த தீயை முழுவதுமாக அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் நல்லவிதமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் சில முக்கிய கோப்புகள் எரிந்து உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளன. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

Previous articleபடிக்காத குழந்தையை அடித்த மனைவி! கணவனின் கொடூர செயல்! பெண்களே உஷார்!
Next articleபதிவு எண் காரணமாக வண்டியை ஓரம்கட்டிய பெண்! ஆன்லைனில் வந்ததால் எதுவும் செய்ய முடியாது என விளக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here