தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25ஆம் தேதி கனமழை பெய்தது இதனை தொடர்ந்து நேற்று வரையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது இந்த மழையின் காரணமாக, மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது தூத்துக்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து தேங்கிக் கிடக்கின்றது. இதன் காரணமாக, இந்த பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது என சொல்லப்படுகிறது. நேற்று காலை முதல் வெயில் அடித்து வந்தது அப்போது மேகமூட்டம் வந்து மிரட்டினாலும் மழை பெய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. பயன்படுத்திக்கொண்டு வீடுகளை சூழ்ந்து இருக்கின்ற மழை நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், மழையின் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உத்தரவிட்டிருக்கிறார்.