தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து நவம்பர் மாதம் முழுவதும் கனமழை பெய்தது தற்சமயம் கடந்த சில நாட்களாக மழை சற்று ஓய்ந்தது வெயில் தலைதூக்கி இருக்கிறது இதன் காரணமாக பொதுமக்கள் விறுவிறுப்பாக அடுத்து மழை வந்துவிடும் என்று துணிகளை துவைத்து காய வைத்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் மழை குறைந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள். 22 சுரங்க பாதைகளில் 20 சுரங்க பாதைகளில் நீர் வெளியேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
இருந்தாலும் வானிலை ஆய்வு மையம் தற்சமயம் மீண்டும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது. அந்த விதத்தில் டிசம்பர் மற்றும் ஜனவரி உள்ளிட்ட மாதங்களில் வாரம் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி அதே பகுதியில் நிலவி வருகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.
அதோடு டிசம்பர் மாதம் 6 மற்றும் 7 உள்ளிட்ட தேதிகளில் மழை இருக்காது, ஆனால் 7 மற்றும் 8 உள்ளிட்ட தேதிகளில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த காற்றழுத்தம் ஏற்பட்டு 9 ஆம் தேதி மேற்கு நோக்கி நகர்ந்து 10 மற்றும் 11 மற்றும் 12 உள்ளிட்ட தேதிகளில் இலங்கை மற்றும் தமிழகத்திற்கு நெருங்கி வரும் அதனால் தமிழ்நாட்டில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன் பிறகு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரையில் மழை பெய்யாமல் நின்று இருக்கும், ஆனால் 16ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வரை அடுத்த காற்றழுத்தம் உண்டாகி மழை பெய்யும், டிசம்பர் மாதம் 26-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி வரையில் மழை பெய்யும், அதாவது டிசம்பர் மாதம் நான்கு காற்றழுத்தம்களும் ஜனவரி மாதத்தில் மூன்று காற்றழுத்தம்களும் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஜனவரி மாதம் 24 ஆம் தேதி வரையில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.