மத்திய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் விடுத்த கெடு! நெறி முறைகளை கவனிக்க தவறவிட்டதால்தான் இந்த நிலை!
தற்போதுள்ள கால சூழ்நிலைகளில் வாகனங்கள் அனைவருமே சொந்தமாக இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். இரண்டு சக்கர வாகனங்களில் இருந்து இப்போது நான்கு சக்கர வாகனங்களை அனைவருமே வளர்ச்சி என்ற பெயரின் மூலம் சொந்த வண்டி வைத்திருந்தால்தான் பெருமை என்ற விதத்தில் வாங்கி வீட்டின் அருகே நிறுத்திக் கொள்கிறோம்.
அப்படி நாம் வாகனங்களை வாங்குவதில் ஒரு பெரிய பாதிப்பை நாம் உலகிற்கும் செய்கிறோம். ஏனெனில் காற்று மிகவும் மாசுபடுகிறது. தற்போது தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகளவில் உள்ளது. அதன் காரணமாக பல இன்னல்களை அங்கு உள்ள மக்கள் அனுபவித்து வருகின்றார்கள். வாகன பெருக்கம் அதற்கு ஒரு காரணம் என்றாலும், அதேபோல் அண்டை மாநிலங்களில் உள்ள விவசாயிகள் விவசாய கழிவுகளை ஏரிப்பதன் காரணமாகவும், காற்றின் தரம் மோசம் அடைந்தது என்று சொல்லப் படுகிறது.
எந்த காரணமாக இருந்தாலும் மாசுவை குறைக்க அந்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தபோதும் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த மாதம் இந்த காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் 15ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடைவிதிக்கப் பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும் கட்டுமான பணிகளுக்கும் அரசு தடை விதித்தது மற்றும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்றும் உத்தரவிடப்பட்டது. அதன் பின்னர் காற்றின் தரம் சற்று நன்றாக இருந்ததன் காரணமாக 29 ம் தேதியிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. ஆனால் அடுத்த 15 நாட்களில் மீண்டும் அங்கு காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து விட்டது.
இதனால் டெல்லியில் மீண்டும் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உள்ளது. இந்நிலையில் காற்றின் தரம் குறித்தும், தரம் மிகவும் மோசமாக உள்ளது குறித்தும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று நீதிபதி என்.வி ராமன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் காற்றின் தரம் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் சரியாக அமல்படுத்தவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு மிகவும் அதிருப்தி தெரிவித்தது.
மேலும் இந்த நிலைமையை உணர்ந்து மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த காற்று மாசுபாட்டை குறைப்பது குறித்து உறுதியான செயல்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென காலக்கெடு விதித்துள்ளது.