ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மனு வாங்க வந்த நபர்! ஆத்திரத்தில் அடித்து விரட்டிய தொண்டர்கள்!
அதிமுக கட்சியில் இனி இருவர் தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று அதிமுக மேலிடம் உறுதிபட கூறியுள்ளது. இந்நிலையில் இனி ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையும் அதற்கென தனி தேர்தல் நடக்கும் என்றும் தெரிவித்து உள்ளது. மேலும் தேர்தல் 7 ம் தேதி நடைபெறும் அதன் வாக்கு எண்ணிக்கை உடனடியாக மறுநாளே அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைஒருங்கிணைபாளர் என்ற பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் வேட்புமனு தாக்கல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. நாளை மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்வோர் செய்யலாம் என்றும், அந்த மனுக்கள் 5 ம் தேதி பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் போட்டியிட அந்த கட்சியின் உறுப்பினர் ஓமப்பொடி பிரசாத் சிங் வந்தார். ஆனால் அவரை அந்த கட்சியின் தொண்டர்கள் அடித்தே வெளியேற்றி உள்ளனர். மேலும் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போதும் அவரை அந்த கட்சியின் தொண்டர்கள் அங்கிருந்து அவரை விடாப்பிடியாக வெளியேற்றி உள்ளனர்.
இது நிகழ்வு குறித்து அதிமுக நிர்வாகிகளிடம் பேசும் போது அவர் விதி முறைகளை பின்பற்றவில்லை என்றும், வழிமொழியவும், முன் மொழியவும் ஆள் இல்லாத காரணத்தால் அவருக்கு வேட்பு மனு அளிக்கவில்லை என மிகவும் எளிமையாக கூறி உள்ளனர். மேலும் முன் மொழிபவர்கள் மற்றும் வலி மொழிபவர்கள் இருவருமே அதிமுக கட்சியில் ஐந்து ஆண்டு கால அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் தன்னை தாக்கியவர்கள் குறித்து ஓமப் பொடி பிரசாத் சிங் புகார் அளிப்பதாக தெரிவித்து உள்ளார்.