நாளை கரையை கடக்கும் ஜாவத் புயல்! தீவிரப்படுத்தப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

0
117

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று புயலாக மாறியது ஜாவத் என்று பெயரிடப்பட்டு இருக்கின்ற அந்த புயல் வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசாவில் மேற்கு மத்திய வங்கக் கடற்கரை பகுதியை இன்று காலை அடையும் என்று சொல்லப்படுகிறது.

அதன்பிறகு வடக்கு வட கிழக்கு புறமாக ஒடிசா, ஆந்திர கடற்கரை பகுதியில் நகர்ந்து ஓடிசா பூரி கடற்கரை பகுதியில் நாளைய தினம் இந்த புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. அதோடு புயலின் போது பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக 64 தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக அந்த துறையின் இயக்குனர் ஜெனரல் அதுர்கர்வால் நேற்று டெல்லியில் கூறியிருக்கிறார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே புதிய புயல் உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து வந்தது. அதேசமயம் புதிதாக உருவாகவிருக்கும் அந்த புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் சொல்லப்பட்டது. அதே போல தமிழகத்தில் படிப்படியாக மழை குறைய தொடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleதமிழகத்தில் இன்று நடைபெறும் 13வது மெகா தடுப்பூசி முகாம்!
Next articleதமிழக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னாள் மத்திய அமைச்சர்!