மயங்க் அகர்வாலின் ருத்ரதாண்டவம்! வெற்றியை நோக்கி இந்திய அணி!

Photo of author

By Sakthi

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராத்திய மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், 25 ரன்களுடனும், களத்தில் இருந்தார்கள்.

இந்த நிலையில், போட்டியின் 2-வது நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது ஆட்டம் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் சாகா 27 ரன்கள் எடுத்திருந்த சூழ்நிலையில், முதல் பந்திலேயே ரன் எடுக்காமல் வெளியேறினார்.

அதன்பிறகு களமிறங்கிய அக்ஷர் பொறுப்பான ஆட்டத்தை விளையாடத் தொடங்கினார். மயங்க் அகர்வால் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்களை மெல்ல மெல்ல உயர்த்தினர். இந்த நிலையில், 2-வது நாள் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்து இருக்கிறது மயங்க் அகர்வால் 145 ரன்களுடன் அக்ஷர் பட்டேல் 32 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.