தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த காரணத்தால், சென்ற வருடம் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரையில் செயல்பட்டு வந்தன. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், டாஸ்மார்க் கடைகள் இயங்கும் நேரம் மாற்றப்படுவது ஆக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மறுபடியும் பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னரே காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இயங்கி வந்த நிலையில் தற்போது நேரம் மாற்றப்பட்டு இருக்கிறது.
இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. இரவு 10 மணி வரையில் கடைகள் செயல்படும் போது விற்பனை கணக்கை முடித்து வைப்பதற்கு இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிடும். இதன் காரணமாக, விற்பனை பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரிக்கும் ஆகவே மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையில் என்று மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் பெரியசாமி, சிஐடியு சம்மேளன பொதுச் செயலாளர் திருசெல்வன், உள்ளிட்டோர் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
வழக்கமாக இரவு 8 மணி முதல் 10 மணிக்குள் தான் மது அதிகமாக விற்பனையாகும், ஆனால் தற்சமயம் 8 மணிக்கு கடைகள் அடைக்கப்படும் கடைகள் அடைக்கப்பட்டதால் செப்டம்பர் மாத புள்ளி விவரத்தின் அடிப்படையில் அரசுக்கு சுமார் 7 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு உண்டாகியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டுதான் இரவு 10 மணி வரையில் கடைகள் இயக்கப்பட இருப்பதாக நிர்வாகம் அறிவித்து இருக்கிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது.