முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டது.

0
132

முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு உண்டாகியிருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 29ம் தேதி 142 அடியை எட்டியது அதனையடுத்து கேரள மாநிலத்திற்கு அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று 8வது நாளாக அணையின் நீர்மட்டம் 141.90 அடியாக இருக்கிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, அணைக்கு 5421 கன அடி தண்ணீர் வருகிறது அணையிலிருந்து கேரளா தொகுதிக்கு 4 ஆயிரத்து 520 ஒரு கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று வரையில் ஆயிரத்து 800 கன அடி வரையில் தமிழக பகுதிக்கு நீர் திறக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், இன்று காலை முதல் 900 கன அடியாக அது குறைக்கப்பட்டிருக்கிறது. நீர் இருப்பு 7639 கன அடியாக இருக்கிறது.

தற்சமயம் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் 70.11 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீரை பொருத்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் பத்தாம் தேதி 69 அடியை எட்டியது அதன்பிறகு அணைக்கு வரும் நீர் முழுவதும் அதிக அளவு திறக்கப்பட்டதன் காரணமாக, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு உண்டானது.

நேற்றைய தினம் 5576 கன அடி நீர் வரையில் திறக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயம் அணையில் இருந்து 4 ஆயிரத்து 103 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது வரும் நீர்வரத்து 8719 கன அடியாக இருக்கிறது. நீர் இருப்பு 5855 கன அடியாக இருக்கிறது. தற்சமயம் மழை சற்று ஓய்ந்தததன் காரணமாக அணைப்பகுதியில் நீர்வரத்து படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous article7-12-2021- இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
Next articleஒரு லட்சத்தை எட்டும் ஒமைக்ரான் தொற்று! ஐஐடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!