டாஸ்மார்க் வேலை நேரம் அதிகரிப்பு! எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு!

0
154

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை என இருந்தது அதனை 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்று மாற்றி அமைத்து கடந்த 2ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழக டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் பட்டிருக்கிறது.

அந்த மனுவில் தொழில் தகராறு சட்டம் மற்றும் தொழிற்சங்க சட்டத்தின்படி வேலை நேரம் மாற்றம் குறித்த தகவலை அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு 21 நாட்களுக்கு முன்பாக தெரிவிக்கவேண்டும் என்று விதி இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

ஆனால் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் தன்னிச்சையாக வேலை நேரம் மாற்றப்பட்டிருக்கிறது, என்றும், இது சட்டவிரோதம் எனவும், இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும், கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதோடு இரவு 10 மணி என்பது பொது மக்கள் நடமாட்டம் குறைவான நேரம் என்ற காரணத்தால், பணப்புழக்கம் இருக்கின்ற டாஸ்மாக் கடைகளில் இருக்கின்ற பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது என்றும், சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது என சொல்லப்படுகிறது.

Previous articleசமூக பரவலாக மாறிய புதிய வகை நோய் தொற்று! எங்கு தெரியுமா?
Next articleமீன் நாற்றம் அடிக்கிறது கீழே இறங்கு! மூதாட்டியிடம் கடுமையாக நடந்த அரசு நடத்துனர்! வைரலாகும் வீடியோ!