கல்லூரிகளில் இதெல்லாம் இனி கூடாது! திடீர் உத்தரவு பிறப்பித்த அரசு!
தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் காரணமாக மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது 57 நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஓமைக்ரான் தொற்று ஆனது நாம் கடந்து வந்த கொரோனா வகைகளில் ஆல்பா, பீட்டா, ஆல்பா பிளஸ் என்ற பல அமைப்புகளை கடந்து மிகவும் தீவிரமாக பாதிக்கும் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டாலும் கூட அவர்களுக்கு ஓமைக்ரான் தோற்று பரவி வருவது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதற்கு புதிதாக பூஸ்டர் டோஸ் போடலாமா என்பது குறித்த ஆலோசனையும் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சில இந்த இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் ஓமைக்ரான் தொற்று பரவி வருவதையும் நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
முதலில் தொற்று இல்லை என்று பரிசோதனையில் வந்தாலும், அதன் பிறகு சோதனை செய்து பார்க்கும் போது அவர்களுக்கு ஓமைக்ரான் இருப்பது உறுதியாகிறது. மேலும் அவர்களது மாதிரிகளை வைத்து தீவிர பரிசோதனை மேற்கொண்ட பிறகு தான் விமான நிலையங்களில் இருந்து பயணிகள் வெளியேறுகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மறு உத்தரவு வரும்வரை எந்த கலை நிகழ்ச்சிகளையும் அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த புதிய வகை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எம்மாதிரியான விளைவுகளை சந்தித்து வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் சொல்ல முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.