ரோகித் சர்மாவை பாராட்டிய விராட் கோலி! எதற்காக தெரியுமா?

0
153

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு கேட்கவே இல்லை ஒரு நாள் போட்டிகளில் விளையாட தயாராகவே உள்ளேன் என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியிருக்கிறார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் 26 ம் தேதி ஆரம்பமாகிறது. ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.

கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விரக்தியின் காரணமாக, விராட் கோலி ஓய்வு கேட்டதை அடுத்து அவர் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்று செய்திகள் வெளியாகின. அதோடு பல்வேறு வதந்திகளும் பரவத் தொடங்கினர்.

இந்த சூழ்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த விராட் கோலி இதுதொடர்பாக விளக்கம் கொடுத்திருக்கிறார். நான் டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து மட்டுமே விலகுவதாக அணி தலைமையிடம் தெரிவித்து இருந்தேன். ஆனால் டெஸ்ட் அணியின் அறிவிப்பு வெளியாவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாக தலைமை அணியின் தேர்வாளர் அழைத்து ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்கி விட்டதாக தெரிவித்தார்.

அதற்கு முன்னர் என்னிடம் இது தொடர்பாக யாரும் எதுவும் கேட்கவில்லை, பேசவுமில்லை, கேப்டன் பதவிக்கு ரோகித்சர்மா நியமிக்கப்பட்டதில் எனக்கு எந்தவிதமான வருத்தமும் கிடையாது. ரோகித் சர்மா திறமையான வீரர் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என்று கூறியிருக்கிறார். நான் எப்போதும் இந்திய அணிக்காக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாட தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Previous articleஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்? அடுத்த லோக்சபா தேர்தலுக்கு புதிய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்
Next articleஅதிமுகவின் தகுதி முறையை விமர்சனம் செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்று அதே முறையை பின்பற்றுகிறார்; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!