பிபின் ராவத் மறைவு! முப்படை தளபதிகளின் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்ட நரவனே!

0
145

கடந்த 8ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி முதல் இரவு உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.இந்த சம்பவம் இந்திய நாட்டை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் உலுக்கியது.

தெற்காசியாவின் சர்வ வல்லமை மிக்க நாட்டின் ராணுவத்தின் மிக முக்கிய அதுவும் உச்சபட்ச அதிகாரம் மிக்க ஒரு பதவியில் இருந்த ஒருவர் திடீரென்று விமான விபத்தில் பலியானது அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல. இதனை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்து வந்து விட முடியாது.

அப்படிப்பட்ட ஒரு துயர சம்பவம் இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பது மிகப்பெரிய துயர சம்பவம் என்று சொல்லப்படுகிறது.

இந்திய ராணுவத்தில் இதற்குமேல் உயரிய பதவி, அதிகாரமிக்க பதவி, இல்லை என்ற ஒரு அதிக முக்கியத்துவம் வாய்ந்த உச்சபட்ச அதிகாரமிக்க பதவியில் இருந்தவர் பிபின் ராவத் அவர் திடீரென்று இந்த விபத்தில் மரணம் அடைந்தது இந்திய அரசியல் வாதிகளையும், உலக அரசியல் தலைவர்களையும், பதைபதைக்க வைக்கும் வண்ணம் இருந்தது.

இந்த சூழ்நிலையில், பிபின் ராவத் மரணம் அடைந்ததை அடுத்து மீண்டும் இந்த முப்படைகளின் தலைமைத் தளபதி யார் என்ற முடிவை எடுப்பதற்காக மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வந்தது. அப்படி தீவிர ஆலோசனை செய்தது இந்த பதவிக்கு அடுத்ததாக யாரை நியமிக்கலாம் என்ற பட்டியலில் முதல் இடத்தில் சாய்ஸாக இருந்தவர் தற்போதைய ராணுவ தளபதி மனோஜ் முகுந்து நரவனே தான். இனிமேல் தற்போது ராணுவத்தில் முக்கிய பதவி வகிப்பவர், அதேசமயம் வயதில் மூத்தவர், அதே போன்று அனுபவம் மிக்கவர், என்ற அடிப்படையில் அவருடைய பெயரை தான் மத்திய அரசு தன்னுடைய சாய்ஸாக எடுத்துக்கொண்டது.

பிபின் ராவத் மரணம் அடைந்ததை தொடர்ந்து முப்படைகளின் தலைமைத் தளபதியின் பதவி காலியாக இருந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து புதிய முப்படை தலைமை தளபதி தேர்வு செய்யும் வேலையில் மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் அடுத்த முப்படைகளின் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்து நரவனே தான் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில் முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்து நரவனே நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். முப்படைகளின் தலைமைத் தளபதி தேர்வு செய்யப்படும் வரையில் இந்த குழுவின் தலைவராக நீடிப்பார் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. பிபின் ராவத் மறைவின் காரணமாக, இடைக்கால ஏற்பாடாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. முப்படை டீஜேஹலபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Previous articleஎப்படியாவது காப்பாற்றுங்கள்! உயிர் போகும் தருவாயில் ஆம்புலன்சில் கெஞ்சிய பிபின் ராவத்!
Next articleநாட்டின் மீண்டும் அதிகரிக்கும் நோய் தொற்று! பாதிப்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!