புதிய வகை நோய் தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த 50கும் மேற்பட்டோர் கண்டுபிடிப்பு! சுகாதாரத்துறை அதிகாரிகள்!

0
113

நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக கடந்த 10ஆம் தேதி சென்னை வந்த 47 வயது நபர் சென்னை சாலிகிராமத்தில் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்று இருக்கிறார் இதனை தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் உண்டானது நோய் தொற்று பரிசோதனை செய்துகொண்ட 14ஆம் தேதி அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உடனடியாக அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்பத்தினரை சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து இருக்கிறார்கள்.

அந்தக் குடும்பத்தைச் சார்ந்த 6 நபர்களுக்கு நோய்த்தொற்று ஒரு செய்யப்பட்டது. இதன் காரணமாக, அவருக்கு உண்டானது உருமாறிய நோய்த்தொற்று தான் என்பதை உறுதி செய்வதற்காக பெங்களூருவில் இருக்கின்ற. பகுப்பாய்வு கூடத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் நைஜீரியாவில் இருந்து வந்தருக்கு நேற்று முன்தினம் புதிய வகை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது இதனையடுத்து நேற்று காங்கோவில் இருந்து வந்தவர் உட்பட தற்போது வரையில் எட்டு பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று நோய் அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் புதிய வகை நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்கள் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தற்போது 59 பேரை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு நோய்தொற்று பரிசோதனையும் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கும்போது புதிய வகை நோய்த்தொற்று பரவல் காரணமாக, பாதிக்கப்பட்ட நபரின் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கு பெற்ற நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்கள். அவர்களுக்கும் நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு அதன் காரணமாக, மருத்துவமனையிலும் நோய் தொற்று இல்லை என்றால் ஒருவார காலத்திற்கு தனிமைப்படுத்தியம் அவர்கள் கண்காணிக்க படுவார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

Previous articleநாட்டின் மீண்டும் அதிகரிக்கும் நோய் தொற்று! பாதிப்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
Next articleசென்னையில் திடீரென்று உள்வாங்கிய கடல்! காரணம் இதுதானாம்!