உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்துக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை!

0
123

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் மாதம் தொடங்கியது, வடகிழக்கு பருவமழை காலத்தில் வட திசை காற்றும், கிழக்கு திசை காற்றும், ஒருசேர வரும்போது பெரும்பாலான மழையை பதிவுசெய்யும் அந்த விதத்தில் தற்சமயம் வடதிசை காற்று அதிக அளவில் இருந்தாலும் கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடிய காற்று என்பது குறைவான அளவிலேயே இருக்கிறது இதன் காரணமாகவே மழை குறைந்து பனியின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அந்தமானுக்கு தெற்கே பூமத்தியரேகை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லை என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வருகின்ற 23ம் தேதி வரையில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.

Previous articleவிழுப்புரத்தில் பசிக் கொடுமையால் 5 வயது சிறுவன் உயிரிழப்பு! எங்கே செல்கிறது தமிழகம்
Next articleஇங்கிலாந்து நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! கட்டுப்பாடுகள் அதிகரிப்பு?