சிறுவர்களுக்கான தடுப்பூசி! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
232

சென்ற 25 ஆம் தேதி தொலைக் காட்சியின் மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதம் மூன்றாம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பு ஊசி செலுத்தப்படும் ஜனவரி மாதம் பத்தாம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறினார்.

இந்த அறிவிப்பை அடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறித்து தேசிய நோய் கட்டுப்பாட்டு தொழில்நுட்ப குழு ஆலோசனை நடத்தியது. இதில் நோய்தொற்று தடுப்பூசிகள் இரண்டாவது தவணை செலுத்தப்பட்டு ஒன்பது மாதங்கள் ஆன பின்னர் தான் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும். அதன் காரணமாக, தான் சென்ற ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அடுத்தபடியாக நோய் தடுப்பூசி செலுத்தி கொண்ட முன் களப்பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தகுந்த இடைவெளி தகுதியுடன் பிப்ரவரியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சிறுவர்களுக்கான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

அதில் தெரிவித்திருப்பதாவது, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி இரண்டாவது தவணை செலுத்தப்பட்ட தேதி அடிப்படையில் செலுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.

தடுப்பூசிகள் இரண்டாவது தவணை செலுத்தப்பட்டு 39 வாரங்கள் அல்லது 9 மாதங்கள் ஆனவர்களுக்கு மட்டுமே இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

இதற்கு முன்பாக செலுத்தப்பட்ட தடுப்பூசியே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தப்படும் இந்த தவணை செலுத்தப்பட்டவுடன் கோவின் சான்றிதழில் மாற்றம் செய்யப்படும். இணையதளம் மற்றும் தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று பதிவு செய்து பூஸ்டர் போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

2007ஆம் வருடம் அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும், 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள் கோவின் இணையதளத்தில் ஜனவரி மாதம் 1 முதல் முன்பதிவு செய்ய வேண்டும், சிறுவர்களுக்கு கோவேக்சின் மட்டுமே செலுத்தப்படும் இவர்களுக்கு ஆன்லைன் மற்றும் தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Previous articleஇங்கிலாந்தில் உச்சமடைந்த நோய் தொற்று பாதிப்பு!
Next articleசர்வதேச தொற்றுநோய் தயார்நிலைதினம்! ஐநாவின் பொதுச் செயலாளர் முக்கிய வேண்டுகோள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here