புத்தாண்டு கொண்டாட்டம்! அதிரடி தடைகளை விதித்த தமிழக காவல்துறை!

0
145

சென்னையில் நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காவல்துறை பல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. புதிய வகை நோய் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்திலான இந்த உத்தரவுகள் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறது, விடுதிகள், தங்கும் வசதி இருக்கின்ற உணவு விடுதிகள், உள்ளிட்டவை இரவு 11 மணி வரையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் தலைநகர் சென்னையில் வருகின்ற 31ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இரவு பைக் ரேஸ் நடத்த காவல்துறை தடை விதித்திருக்கிறது.

அதேபோல மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம், முதல் காந்தி சிலை வரை வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. காமராஜர் சாலை பெசன்ட் நகரை ஒட்டியிருக்கின்ற கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.அதிவேகத்தில் வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Previous article10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்? பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேட்டி!
Next articleபிரதமர் பயணிக்கும் புதிய கார்! அதிரடி பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய காரின் விலை எத்தனை கோடி தெரியுமா?