தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்சமயம் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி 105 .3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை சேர்த்தது.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 62.3 ஓவர்களில் 193 ரன்களுக்குச் சுருண்டது. இதன்மூலமாக 130 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.
ஆனாலும் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள் கடைசியில் இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் 62.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 197 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
ஆகவே தென்னாபிரிக்காவை விட 304 ரன்கள் முன்னிலை பெற்றது இந்திய அணி, இதனைத்தொடர்ந்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 94 ரன்கள் எடுத்து இருக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே இருக்கின்ற சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்கா இன்னும் 211 ரன்கள் எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரம் அந்த அணியிடம் 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்கின்றன, இந்த 6 விக்கெட்டுகளையும் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெறுமா என்பதே இன்றைய போட்டியின் விறுவிறுப்பாக காணப்படுகிறது.