5க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமைச் செயலாளராக நிலை உயர்வு! அரசாணை வெளியிட தமிழக அரசு!

0
107

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியீட்டு இருக்கின்ற அரசாணைகள் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த 1991-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து வழங்கி உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி வா உ சி துறைமுக தலைவர் டி. கே. ராமச்சந்திரன், பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளர் எஸ். கோபாலகிருஷ்ணன், எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா நிதித்துறை கூடுதல் செயலாளர் என் முருகானந்தம், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் சந்திரகாந்த் காம்ப்ளே, சுற்றுசூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷாம்பு கல்லோலிகர் உள்ளிட்டோர் முதன்மைச் செயலாளர் அந்தஸ்திலிருந்து தலைமைச் செயலாளர் அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டு இருக்கிறார்கள் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் தலைமைச் செயலாளர் அந்தஸ்திற்கு உயர்வு பெற்றாலும், அவர்கள் பணி விதிகளின் அடிப்படையில் கூடுதல் தலைமைச் செயலாளராக அழைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Previous article30-12-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
Next articleபுத்தாண்டின் போது இதை செய்தால் அதிரடி கைது! சைலேந்திரபாபு கடுமையான எச்சரிக்கை!