தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

Sakthi

தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நோய்த்தொற்று பரவலை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அன்றிலிருந்து இன்றுவரையில் நோய்த்தொற்று பரவல் இருந்து வருவதன் காரணமாக, தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் நோய்த்தொற்று பரவல் தீவிரத்தைப் பொறுத்து அவ்வபோது ஊரடங்கு தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது, கடந்த 15ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவு பெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நோய் தொற்று பரவல் அதிகரிப்பதுடன் புதிய வகை நோய்த்தொற்று பரவலும் அதிகரித்து வருகிறது.

ஆகவே ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்பது தொடர்பாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் சாலையில் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆரம்பமாகிறது. பல்வேறு கோணங்களில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு அது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது.