நோய் தொற்று காரணமாக, நாட்டிலும் சரி, மாநிலங்களிலும் சரி, பலவிதமான விஷயங்கள் தள்ளி போய்க் கொண்டே இருக்கின்றன. இதனால் மக்கள் பலரின் தேவைகள் பூர்த்தி ஆகாமல் இருந்து வருகிறது.
ஆனாலும் நோய்தொற்று பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இதனை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று மத்திய, மாநில, அரசுகள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று முதல் வழக்குகள் நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும் என்று கடந்த மாதம் 27ம் தேதி அறிவித்தது.
அதாவது நோய் தொற்று பரவாமல் ஆரம்பத்திலிருந்து நீதிமன்றங்களில் வழக்குகள் அனைத்தும் காணொளிக்காட்சி மூலமாகவே நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக, இன்று முதல் ஆரம்பிக்க இருந்த நேரடி விசாரணை குறித்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு காணொலிக் காட்சி மூலமாக மட்டுமே அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் உத்தரவிட்டிருக்கிறார்.
அந்த அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, நேரடி விசாரணை முறை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது, ஈமெயில் மூலமாக வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டும் அதேபோன்று தீர்ப்பு நகல் தெரிவித்த விண்ணப்பங்கள் இமெயில் மூலமாக அனுப்பப்படும். தவிர்க்க இயலாத சூழ்நிலையில், குறிப்பிட்ட கவுண்டர்கள் அல்லது பிரத்யேகப் பெட்டிகளில் விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம். அந்த சமயத்தில் நோய் தொற்று தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.