தமிழக உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகர் வெளியிட்டிருக்கின்ற அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
கடந்த 2004ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளான ஏ.கே. செந்தில்வேலன், தினேஷ்குமார், ஆஸ்ரா கார்க், ஏ.சி. பாபு பி செந்தில்குமாரி, ஏ.டி. துரைகுமார், மகேஸ்வரி என் இசட் ஆசையம்மாள், இராதிகா, எஸ் .மல்லிகா, லலிதா லட்சுமி, விஜயகுமாரி, எம். பி விஜயகௌரி மற்றும் என்.காமினி உள்ளிட்ட 14 காவல்துறை அதிகாரிகள் ஐஜி பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்று இருக்கின்ற இந்த 14 அதிகாரிகளுக்கும் ஐஜி அந்தஸ்துக்கான பணிநியமன ஆணை விரைவில் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.