நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்திருக்கிறது அதோடு புதிய வகை நோய் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, 15 வயது முதல் 18 வயது வரையில் இருக்கின்ற சிறுவர்கள், சிறுமிகளுக்கு, தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
இதனை அடுத்து நாடு முழுவதும் 10 கோடி சிறுவர்களுக்கு நோய்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் ஆரம்பிக்க இருக்கிறது.
சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆரம்பித்து வைத்திருக்கிறார். இன்று மட்டும் 26 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு, தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அளவில் 33 லட்சத்து 20 ஆயிரம் சிறார்களுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நோய்த்தொற்று தடுப்பு ஊசி செலுத்துவதற்கு தகுதிவாய்ந்த சிறுவர்கள் கோவின் செயலி மூலமாக ஆதார் அல்லது பத்தாம் வகுப்பு பள்ளி அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி முன்பதிவு செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன
தற்சமயம் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் கோவிஷீல்ட் ஸ்புட்னிக் உள்ளிட்ட 3 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால் 15 வயது முதல் 18 வயது வரையில் இருக்கின்ற சிறார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமே செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.