நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு நோய்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணியை நேற்று ஆரம்பமானது. இதில் சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டிலும் 33 லட்சத்து 46 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சைதாப்பேட்டையில் ஆரம்பித்துவைத்தார். பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள், சில மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் வாங்கிய பின்னர் தடுப்பூசி செய்து கொள்வதாக தெரிவித்தார்கள்.
இந்த சூழ்நிலையில், முதல் நாளான நேற்று தமிழகத்தின் 3 லட்சத்து 32 ஆயிரத்து 493 சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. அந்த விதத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 25 ஆயிரத்து 427 பேருக்கும், விழுப்புரத்தில் 16 ,796 பேருக்கும், திருச்சியில் 14 ,556 பேருக்கும், மதுரையில் 14 ஆயிரத்து 731 பேருக்கும், அதேபோல சேலம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 65 சிறுவர்களுக்கும், 14 மாவட்டங்களில் தலா 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
குறைந்தபட்சமாக ராணிப்பேட்டையில் 2 ,985 பேருக்கும், திருவாரூரில் 2010 பேருக்கும், மயிலாடுதுறையில் 1037 சிறுவர்களுக்கும், தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. சென்னையில் முதல் நாளில் 4 ஆயிரத்து 606 சிறுவர்களுக்கு மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி இருக்கிறார்கள். அதே நேரத்தில் முதல் நாளான நேற்று இரவு 7 20 மணி நிலவரப்படி 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 9 . 94 சதவீதம் சிறுவர்கள் தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், என்று வழக்கமாக செயல்படும் மையங்களில் சிறுவர்களுக்கு என்று தனியாக வரிசையும் உண்டாக்கி தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. அதற்கு தேவைப்படும் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யுமாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள கோவின் இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு அதன் பிறகுதான் வர வேண்டும் என்பது கட்டாயமில்லை, பதிவு செய்யவில்லை என்றாலும் சுகாதாரத் துறை பணியாளர்கள் பதிவு செய்து தடுப்பூசியை செலுத்தி விடுவார்கள் என்று பொது சுகாதாரத்துறை கூறியிருக்கிறது.