டிஜிட்டல் முறையில் இன்டர்நெட் இல்லாமல் பரிவர்த்தனை செய்யும் வசதிக்கு பரிசோதனை முயற்சியில் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியிருக்கிறது. தற்சமயம் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனைகள் நடைபெறுவதற்கு இன்டர்நெட் இணைப்பு அவசியம் இணையதளம் அல்லது கைபேசியின் மூலமாக இணையதள வசதியுடன் உடனடியாக பணப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் தற்சமயம் நடந்து வருகின்றன.
ஆனாலும் இணையதள வசதி இல்லாத பகுதிகளில் டிஜிட்டல் சேவைகள் நடைபெறுவது சாத்தியமில்லாமல் இருக்கிறது, பல பின்தங்கிய கிராமங்களில் தற்போதும் இணையதள சேவைகள் கிடைக்கப்பெறாத சூழ்நிலை இருக்கிறது.
உலக வங்கியின் 2019 வருடத்தின் தரவுகளின் அடிப்படையில் நம்முடைய நாட்டில் நாற்பத்தி ஒரு சதவீதம் மக்கள் மட்டுமே இணையதள வசதி பெற்றிருக்கிறார்கள் இந்த வசதி கிடைக்காத மற்ற மக்களுக்கும் டிஜிட்டல் வசதி கிடைக்க உதவிடும் விதத்தில் இந்த வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த வசதியின் மூலமாக ஒரு முறைக்கு அதிகபட்சமாக 200 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ள இயலும். ஒரு மாதத்திற்கு 2000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளை இணையதள வசதி இன்றி வாடிக்கையாளர்கள் பெற இயலும். கடன் அட்டை மொபைல் செய்திகள் உள்ளிட்ட வகைகளில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.
இந்த வசதி வரும் வாடிக்கையாளர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகுதான் இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும், இந்த வகை பரிவர்த்தனைகளுக்கு ஓ டி பி நம்பர் செலுத்துவது உள்ளிட்ட சரி பார்க்கும் வழக்கமும் இருக்காது. பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் எஸ் எம் எஸ் மூலமாக பணம் செலுத்துவதற்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இது தொடர்பான பரிசோதனை உள்ளிட்டவற்றை ரிசர்வ் வங்கி கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மேற்கொண்டு வருகிறது. அந்த சோதனைகள் வெற்றி பெற்றதை அடுத்து தற்சமயம் இந்த சேவை வழங்கும் முயற்சிக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
இந்த வசதியின் மூலமாக நாட்டில் இருக்கின்ற எல்லோருக்கும் டிஜிட்டல் வசதி கிடைக்கும் வாய்ப்பு உண்டாகி இருக்கிறது. இந்த முயற்சியின் மூலமாக டிஜிட்டல் துறையில் அதிக அளவு முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இந்த புதிய பரிவர்த்தனைகள் மூலமாக வாடிக்கையாளருக்கு பிரச்சனை உண்டு ஆனால் இந்த வசதியை தரும் நிறுவனத்திடம் புகார் வழங்கலாம், ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இருக்கிற புகார் மையத்தில் புகார் வழங்கலாம். இந்த புதிய முயற்சி டிஜிட்டல் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பாக நிச்சயமாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள் வங்கியாளர்கள்.