ஜல்லிக்கட்டு நடத்தலாமா வேண்டாமா முதல்வருக்கு ஆலோசனை கூறிய உயரதிகாரிகள்! குறுக்கே பாய்ந்து தடுத்த அமைச்சர்கள்!

0
142

வருடம்தோறும் ஜனவரி மாதம் விட்டாலே போதும் என் தமிழக இளைஞர்கள் புறப்பட்டு விடுவார்கள் வாடிவாசலை நோக்கி அனைத்தும் ஜல்லிக்கட்டுகாகத்தான். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் சிவகங்கை, ராமநாதபுரம், என்று ஒரு காலத்தில் சில மாவட்டங்களில் மட்டுமே கொடிகட்டிப் பறந்த ஜல்லிக்கட்டு கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அத்தனை மாவட்டங்களிலும் பரவிக் கிடக்கின்றது.

தை பிறந்தால் வழி பிறக்கிறதோ இல்லையோ ஆனால் ஒரு சில ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களுக்கு பணம் பெருகுகிறது. காரணம் என்னவென்றால் பல மாவட்டங்களில் மிகப்பெரிய செலவில் ஜல்லிக்கட்டுகளை நடத்தி அவர்கள் பணம் பார்க்க தொடங்கிவிடுவார்கள். இதைத்தவிர இதில் நடைபெறும் அரசியலும் ஜல்லிக்கட்டு மாடுகளை விடவும் வேகமாக இருக்கிறது, ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியம் என்பதை கடந்து அது தற்சமயம் அரசியல் ஆகி நிற்கிறது.

அந்த விதத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனைவரும் தயாராக நிற்கிறார்கள். மாடுபிடி வீரர்கள் முட்டை, மாமிசம், உள்ளிட்டவற்றை அதிகமாக சாப்பிட்டுவிட்டு தங்களுடைய உடம்பை தயார் செய்து வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் புதிய வகை நோய் தொற்று பரவலால் கணிசமான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு விட்ட சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெறுவது சாத்தியமா? அவசியமா? இந்த வருடம் அதை நடத்தாமல் விடுவது நல்லது, இல்லையென்றால் மாடுபிடி வீரர்களும் சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்ற மாட்டார்கள். அதோடு பார்வையாளர்களும் தனிமனித இடைவெளியை பின்பற்ற மாட்டார்கள் என்று அரசு உயரதிகாரிகள் முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அரசு உயரதிகாரிகள் முதலமைச்சருக்கு இப்படி எச்சரிக்கை மணி அடித்து இருந்தாலும் இதனை மூத்த அமைச்சர்கள் குறுக்கே பாய்ந்து தடுத்துவிட்டார்கள். ஜல்லிக்கட்டு என்பது நம்முடைய மாநிலத்தின் பெருமை அது மறுக்கப்பட்ட சமயத்தில் அந்த உரிமையைப் போராடி வாங்கிய கரங்களில் திமுகவின் பங்கு மிகவும் பெரியது. என்ன நடந்தாலும் சரி ஜல்லிகட்டு நடந்தே தீரவேண்டும் பார்வையாளர்களை வேண்டுமென்றால் குறைத்துவிடலாம் என முட்டுக்கட்டை போட்டு விட்டார்களாம் மூத்த அமைச்சர்கள்.

ஆனால் உண்மையிலேயே இந்த அமைச்சர்களுக்கு தமிழர்களின் பாரம்பரியம் மீது அவ்வளவு ஆர்வமா என்று பார்த்தால் அதெல்லாம் எதுவும் இல்லை. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த போது தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், இந்த அமைச்சர்கள் கண் முன்னே வந்து போனது என்னதான் நோய் தொற்று உள்ளிட்டவற்றை காரணமாக தெரிவித்து ஜல்லிக்கட்டுக்கு இந்த வருடம் தடை போட்டாலும் தென் மாவட்ட மக்கள் அரசுக்கு எதிராக பொங்கி எழுந்து விடுவார்கள், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வருகின்ற சூழ்நிலையில், இது மிகப்பெரிய ஆபத்து என்று தெரிவிக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக இளைஞர்களின் வாக்குவங்கி திமுகவிற்கு முற்றிலுமாக கிடைக்காமலே போய்விடும், பிறகு திமுகவிற்கு தோல்வி என்பது உறுதியாகிவிடும் என்று பயந்துதான் அரசு உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் குறுக்கே புகுந்து இந்த விவகாரத்தில் முட்டுக்கட்டை போட்டு இருக்கிறார்களாம் திமுக அமைச்சர்கள்.

Previous articleஇந்தியாவில் மீண்டும் அசுர வேகத்தில் பரவும் நோய் தொற்று!
Next article402 நாடாளுமன்ற ஊழியர்களுக்கு நோய்த்தொற்று பரவல்! பீதியில் டெல்லி அரசியல் பிரமுகர்கள்!