நாட்டில் 2 லட்சத்தை நெருங்கும் தினசரி நோய்த் தொற்று பாதிப்பு!

0
119

நாட்டின் நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாக இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு 1 லட்சத்து 68 ஆயிரத்து 63 ஆக இருந்தது. ஆனாலும் இன்று ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 720 ஆக அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக, நாட்டில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்து 70 ஆயிரத்து 510 ஆக அதிகரித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 61405 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். இதன் காரணமாக, நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரத்து 536 ஆக அதிகரித்திருக்கிறது நாடு முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 3 லட்சத்து 55 ஆயிரத்து 319 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் நோய்கள் தாக்குவதற்கு 442 பேர் பலியாகி இருக்கிறார்கள், இதன் அடிப்படையில் நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 84 ஆயிரத்து 655 அதிகரித்து இருக்கிறது. அதோடு நாட்டில் 407 பேர் புதிய வகை தொற்றான ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டில் புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 868 ஆக அதிகரித்திருக்கிறது. இதில் 1805 பேர் குணமடைந்த சூழ்நிலையில், 3 ஆயிரத்து 63 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.