இந்தியாவைப் பொறுத்தவரையில் நோய்த்தொற்று தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கின்ற சூழ்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை சென்ற வருடம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார்.
ஆரம்பத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கும், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோர், 45 வயதுக்கும் மேற்பட்ட இணை நோய் இருப்பவர்களுக்கும், தடுப்புசி செலுத்தும் பணி விரிவு செய்யப்பட்டது. சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட எல்லோருக்கும் தடுப்பூசி என்ற அறிவிப்பு வெளியானது.
சென்ற வருடம் மே மாதம் 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமானது. ஆரம்பத்தில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் பொதுமக்களுக்கு தயக்கம் இருந்தது. ஆனாலும் தடுப்பூசி மட்டுமே நோய்த்தொற்றை வெல்லும் பேராயுதம் என்று மத்திய அரசு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்ததன் ஒருபகுதியாக பொதுமக்கள் இடையே ஆர்வம் அதிகரித்தது. சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி தவணைகளின் எண்ணிக்கை 10ஆயிரம் கோடியை நெருங்கியது.
இந்த எண்ணிக்கை சென்ற வருடம் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 100 கோடி என்ற இலக்கை தாண்டியது, தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பித்து ஒன்பது மாதங்களுக்குள் 100 கோடி தவணை தடுப்பூசி இலக்கை எட்டியது உலக அளவில் மிகப்பெரிய சாதனையாக விளங்குகிறது. அதேபோல சென்ற 7ம் தேதி தடுப்பூசி தவணை எண்ணிக்கை 150 கோடியைத் தாண்டியது. இதுவரை 150 கோடிக்கும் அதிகமான தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.