மோடியை தவறாக சித்தரித்த விவகாரம்! பிரபல தொலைகாட்சிக்கு மத்திய அரசிடம் இருந்து பறந்த நோட்டீஸ்!

0
123

ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழகத்தில் பிரபலமான ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இந்த தொலைக்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடியை கேலிசெய்து ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக தமிழக பாஜக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் உத்தரவின் அடிப்படையில் அவருடைய அமைச்சரவையில் இருந்து அந்த தொலைக்காட்சிக்கு நேற்று எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

அந்த நிறுவனத்தின் நொய்டாவில் இருக்கின்ற நிர்வாக இயக்குனருக்கு தகவல் ஒலிபரப்புத் துறையின் அண்டர் செகரட்டரி கத்தார் ஜீ தமிழ் சேனலில் ஆட்சேபத்துக்குரிய நிகழ்ச்சி ஒளிபரப்புவது தொடர்பாக வந்த புகார் குறித்து என்ற பொருளின் கீழ் அனுப்பிய அந்த கடிதத்தில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அமைச்சகத்திற்கு உங்களுடைய ஜீ தமிழ் சேனலில் சென்ற 15ஆம் தேதி அன்று ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சி தொடர்பான புகார் வந்திருக்கிறது. அந்த புகாரின் சாரமும் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் ஏழு நாட்களுக்குள் நீங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லையென்றால் உங்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை தன்னுடைய வலைதளத்தில் பகிர்ந்து இருக்கின்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீதியின் பக்கம் நின்று இந்த நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய இணை அமைச்சர் முருகன் அவர்களுக்கு நன்றிகள் என்று கூறியிருக்கிறார்.

இந்த செயல்முறை இருதரப்புக்கும் வெளிப்படையானதாக இருக்கிறது எந்த ஒரு தனிப்பட்ட விஷயத்திற்கும் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதே நம்முடைய விருப்பம் ஊடகங்களை நாம் உயர்ந்த இடத்தில் வைத்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Previous articleஅதுக்கு நாங்க காரணமில்ல! விளக்கம் தந்த மத்திய அரசு!
Next articleகுடியரசு தின விழாவில் தமிழக ஊர்திகளின் அனுமதி மறுப்பு ஏன்? உண்மையான காரணம் இதோ!