டெல்லியில் நடைபெற இருக்கின்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கு இடையே மாநிலத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கின்ற வானதி சீனிவாசன் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது தொடர்பாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒருசில உள்நோக்கத்திற்காகவே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்கள் என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதோடு அவர் தெரிவித்திருப்பதாவது, பாஜக ஆளும் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம் பெற அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள், அலங்கார ஊர்தி விண்ணப்பம் செய்து இருந்தாலும். 12 ஊர்திகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியிருக்கிறார். ஆனாலும் உண்மை இவ்வாறு இருக்க அதனை மறைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியின் ஒரு அங்கமாக திமுக அரசின் நடவடிக்கைகள் அமைந்திருக்கிறது என கூறியிருக்கிறார் வானதி ஸ்ரீனிவாசன்.
ஆனாலும் சுதந்திர போராட்ட வீரர்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் எந்தவிதமான முயற்சியும் நாங்கள் வரவேற்கிறோம். இந்த அலங்கார ஊர்தியை சிறிய கிராமங்கள் வரையில் கொண்டு செல்ல வேண்டும், எல்லா மாவட்டத்திற்கும் ஒரு அலங்கார ஊர்தியை தமிழக அரசு ஏற்பாடு செய்து தமிழகம் முழுவதும் வலம் வர செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
வ. உ. சிதம்பரம் பிள்ளை, வேலுநாச்சியார், உள்ளிட்ட விடுதலைப் போராட்ட தலைவர்களின் வீர வரலாற்றையும் அவர்களுடைய தேசியம், தெய்வீகம், தாங்கிய கருத்துகளையும். பொது மக்களிடம் கொண்டு சேர்க்க முதலமைச்சர் எடுத்திருக்கின்ற முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.