மருத்துவ முதுநிலை பட்டப் படிப்பு இணையதள கலந்தாய்வு தொடங்கியது!

Photo of author

By Sakthi

அரசு மருத்துவ கல்லூரிகள் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இருக்கின்ற அரசு ஒதுக்கீட்டு என.டி.எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு உள்ளிட்டவற்றில் சேர்வதற்காக கலந்தாய்வு நேற்று முதல் ஆரம்பித்து இருக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போக மீதம் இருக்கின்ற 1161 இடங்களுக்கு தகுதியுடைய 2217 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியான சூழ்நிலையில், அவர்கள் எல்லோருக்குமான கலந்தாய்வு இணைய தளத்தில் நேற்று ஆரம்பித்தது.

முதலில் பதிவு மற்றும் கட்டணம் செலுத்துவதற்காக 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் நாளை மறுநாள் வரையில் தரவரிசையில் 1 முதல் எழுத்து 2217 வரையில் இடம் பெற்றவர்கள் தங்களுக்கான பதிவை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இதனையடுத்து வருகின்ற 24-ஆம் தேதி முதல் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் நபர்களுக்கான விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதனை 29ம் தேதி வரையில் அவர்கள் செய்யலாம். இவர்களுக்கான முதல்கட்ட இறுதி முடிவு வருகின்ற 28ம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 29ஆம் தேதி காலை 9 மணி முதல் ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு அவ்வாறு ஒதுக்கீட்டு ஆணையை பெற்றவர்கள் வருகின்ற 30 ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 5ஆம் தேதிக்குள் அவர்களுக்கு ஒதுக்கீடு பெற்ற இடங்களில் சேர வேண்டும். மேற்கண்ட தகவல் மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் வசந்தாமணி வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.