தஞ்சாவூர் மாவட்டத்தில் படித்துவந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி விடுதியில் தங்கியிருந்தபோது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மாணவியை மதம் மாற வற்புறுத்தியதன் காரணமாக, மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் மற்றும் பாஜகவின் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அதற்கு பள்ளி நிர்வாகம் தன்னுடைய மறுப்பை தெரிவித்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்கும் விதத்தில் தமிழக பாஜக சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது இதில் மாணவி உறவினர்கள் பாஜகவின் சார்ந்தவர்கள் என்று ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சட்டசபை உறுப்பினரும், பாஜகவின் மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் உரையாற்றும்போது திமுக ஆட்சிக் காலம் இன்னும் 4 வருட காலங்கள் இருக்கிறது ஆனால் இந்த நான்கு ஆண்டுகாலம் அவர்கள் ஆட்சி நீடிக்குமா? என்று நிச்சயமாக சொல்ல முடியாது. இதற்குப் பிறகு அவர்கள் ஆட்சி நீடிக்காது என்று கூறியிருக்கிறார்.
அதோடு சட்டசபையில் ஆண்மையுடன் பேசக்கூடிய அதிமுகவை சேர்ந்தவர்களை பார்க்க முடியவில்லை. 4 பேர் இருந்தாலும் சட்டசபையில் மக்கள் பிரச்சனையை பாஜகதான் முன்னிறுத்தி பேசுகின்றது. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை எதிர்க்கட்சியாக இல்லாமல் இருந்தாலும் கூட ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி வழங்குபவர் அண்ணாமலை மட்டுமே என்று தெரிவித்திருக்கிறார், அவருடைய இந்த பேச்சு அதிமுகவினருக்கு இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.